இந்தியா

இனி விமான பயணத்தில் "WiFi" வசதி! மத்திய அரசின் அறிவிப்பால் படுகுஷியில் பொதுமக்கள்!

Summary:

wifi in flight

இந்தியாவுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு ‘வை-பை’ இணைய வசதியை வழங்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு ‘வை-பை’(WiFi) இணைய வசதியை வழங்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு வை-பை மூலம் இணைய சேவைகளை வழங்க விமானி அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை விமான நிறுவனங்களின் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழையும்போது ‘வை-பை’ வசதியை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் லேப்டாப், செல்போன்கள், டேப்லட் கணினி, ஸ்மார்ட் வாட்ச், இ-ரீடர், பி.ஓ.எஸ் சாதனங்கள் ஆகியவற்றுக்கு ‘வை-பை’ வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இந்த வசதியை ஃப்ளைட் மோடில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement