கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி! கல்லைப் போட்டு கொன்ற கள்ளக்காதலன்.! உண்மையை போட்டுடைத்த 14 வயது மகள்

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி! கல்லைப் போட்டு கொன்ற கள்ளக்காதலன்.! உண்மையை போட்டுடைத்த 14 வயது மகள்


wife killed her husband for illegal affair

கர்நாடக மாநிலம்  துமகூரு மாவட்டம் புட்டிஹள்ளி கிராமத்தில் வசித்துவருபவர் நாரயணப்பா(52)-அண்ணபூர்ணா(36). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நாரணயப்பா பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் எல்க்டிரிசியனாக வேலை செய்து வருகிறார். அண்ணபூர்ணா அங்கிருக்கும் வெங்காய மண்டியில் வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில், அன்னபூர்ணாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை அறிந்த நாரணயப்பா இது குறித்து மனைவியிடம் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று நாரயணப்பா மற்றும் அண்ணபூர்ணாவிற்கும் இடையே வாக்குவாதம் கடுமையாக முற்றியதால், வீட்டில் இருந்த பெட்ரோலை நாரணப்பா மீது ஊற்றிய அண்ணபூர்ணா அவர் மீது தீயை கொளுத்தி போட்டுள்ளார். இதனால் வலியில் துடித்த அவர், வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து அங்கிருந்த சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்துள்ளார்.

Murderஅந்த நேரத்தில் காதலன் ராமகிருஷ்ணனும் அங்கு இருந்ததால், தண்ணீரில் விழுந்து எங்கு இவர் உயிர்பிழைத்துவிடுவார் என்று எண்ணி அவர் மீது கல்லைப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலே நாரயணப்பா துடி துடித்து இறந்துள்ளார். உடனே அங்கிருந்து அன்னபூர்ணா, ராமகிருஷ்ணா தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டில் இருந்த மூன்று மகள்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது 14 வயது மதிக்கத்தக்க மூத்த மகள் நடந்தவற்றை கூறியுள்ளார். மேலும் விசாரணையில், மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால், நாராயணா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான அன்னபூர்ணா, ராமகிருஷ்ணாவை போலீசார் தேடிவருகின்றனர்.