நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
மல்லிகை பூவாய் எனது வாழ்வில் வந்தவள்..!ஒரு வருடத்திற்குள் இப்படி மாறிவிட்டது..!அழகிய கணவன் மனைவியின் உருக்கமான காதல் கதை..!

கேரளாவை சேர்ந்த இளம் கணவன் - மனைவி பதிவிட்ட முதலாம் ஆண்டு திருமண புகைப்படம் ஓன்று அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஷான் இப்ராகிம் என்பவர் தன்னுடன் கல்லூரியில் படித்த ஸ்ருதி என்பரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த சில நாட்களில் ஸ்ருதிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. காதல் மனைவிக்கு புற்றுநோய் இருந்த விஷயம் இருவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மனம் தளராத ஷான் தனது மனைவிக்கு எல்லாவுமாக இருந்து சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.
கீமோ தெரபி சிகிச்சை எடுக்க ஆரம்பித்தனர். இதனால் ஸ்ருதியின் தலை முடி கொட்ட தொடங்கியுள்ளது. தனது மனைவிக்கு ஆறுதலாக தனது தலையையும் மொட்டை அடித்துக்கொண்டார் ஷான்.
இந்நிலையில் இவர்களது முதலாம் ஆண்டு திருமண நாள் அன்று, எனது கல்லூரி காலத்தில் ஒரு மல்லிகை பூவாய் எனது வாழ்வில் வந்து, பல்வேறு சவால்களை சந்தித்து அவளை கரம்பிடித்தேன்.
எனது வாழ்க்கையில் இக்கட்டான நிலைகளில் எனக்கு உறுதுணையாக இருந்தவள் ஸ்ருதி. தற்போது நான் அவளுக்கு எல்லாவுமாக இருந்து அவளை காப்பாற்றுவேன், அவள் எனது தோழி, எனது மனைவி, எனது மகள் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ஷான்.