மனைவி வேலைக்கு சென்றவுடன்.... மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய தந்தை...!

மனைவி வேலைக்கு சென்றவுடன்.... மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய தந்தை...!


When the wife went to work.... the father sexually assaulted the daughter and made her pregnant...

கர்நாடக மாநிலத்தில்13 வயது சிறுமியின் தந்தை, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தின் ஜீவர்கியில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு கடந்த சில நாள்களாக சிறுமிக்கு தொடர்ந்து வாந்தி மற்றும் மயக்கத்தால் தவித்து வந்துள்ளார். 

தொடர்ந்த இந்த பிரச்சனை சரியாகாதால், அவரது தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து , சிறுமியிடம் உண்மையை விசாரித்தனர். அப்போது இந்த கர்ப்பத்திற்கு காரணம் சிறுமியின் தந்தை என்று தெரிந்தது. 

சிறுமியின் தாயார் வயல் வேலைக்கு சென்றவுடன், தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையறிந்த  சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். தந்தை தனது மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.