திருமணத்திற்கு முன்பே எடுக்கப்பட்ட மோசமான போட்டோஷுட்... ஆத்திரத்தில் குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு.!

திருமணத்திற்கு முன்பே எடுக்கப்பட்ட மோசமான போட்டோஷுட்... ஆத்திரத்தில் குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு.!


we-wont-remove-says-kerala-couple-trolled-for-viral-wed

கேரளா மாநிலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்யும் கார்த்திக் என்பவருக்கும் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் படிப்பை முடித்த லட்சுமி ஹ்ருஷி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணமானது மணமகள் ஊரான கொல்லத்தில் உள்ள ஒரு கோயிலில் செப்டம்பர் 16ம் தேதி நடைப்பெற்றது.

இந்த இளம் ஜோடிகள் திருமணத்திற்கு முன்பு ட்ரெண்டாக்கி கொண்டிருக்கும் ப்ரீ வெட்டிங் போட்டோஷுட்டை கவர்ச்சியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த சமூக வாசிகள் சிலர் அந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாக ஒருபுறமும், இன்னொருபுறம்,  படங்கள் அற்புதமாகவும், அழகாகவும் இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

KERALA

பலர் சமூக வலைதலங்களில் இருந்து அந்த புகைப்படங்களை நீக்குமாறு கூறினார்கள். ஆனால் புதுமணத்தம்பதிகளோ, சமூக ஊடக மிரட்டல்களுக்குப் பயந்து அந்த புகைப்படங்களை அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புதுமணப்பெண் லட்சுமி பிபிசியிடம், ஆரம்பத்தில் எங்கள் பெற்றோர்கள் கூட புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின் நாங்கள் ஏன் இப்படி செய்ய விரும்பினோம் என்பதை அவர்களுக்கு விளக்கினோம். பிறகு அவர்கள் புரிந்துகொண்டனர்.

சில உறவினர்கள் இதெல்லாம் தேவையா? நமது பண்பாட்டை மறந்து விட்டீர்களா? அந்தப் புகைப்படங்களை நீக்குங்கள் என பலர் வலியுறுத்தினார்கள்.  குடும்ப வாட்சப் குழுக்களில் இருந்து சிலர் நீங்கினார்கள்.ஆனால் அந்த படங்களை அகற்றினால், நாங்கள் தவறு செய்ததாக அர்த்தமாகிவிடும். 

அத்துடன் அந்த படப்பிடிப்பின்போது மென்பட்டுப் போர்வைக்குள்ளே நாங்கள் ஆடை அணிந்துதான் இருந்தோம் என கூறினார்.