இந்தியா லைப் ஸ்டைல்

விவசாய நிலத்தில் தண்ணீர் குழாயில் இருந்து வந்த பால்..! கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்.. ! வைரல் வீடியோ.!

Summary:

Water coming like milk in Andhra farmer land video goes viral

ஆந்திரா மாநிலத்தில் விவசாய நிலத்தில் போடப்பட்ட போரில் இருந்து பால் வண்ண தண்ணீர் வந்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கிரந்திவேமுலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட சிவா. இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் தண்ணீருக்காக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்துள்ளார்.

இத்தனை வருடங்களாக அதன்மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்த வெங்கட சிவா சமீபத்தில் யலுக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டர் போட்டுள்ளார். அப்போது குழாயில் இருந்து தண்ணீருக்கு பதிலாக பால் வந்துள்ளது. அருகில் சென்று பார்த்தபோது தண்ணீர் பால் வண்ணத்தில் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கட சிவா இதுகுறித்து விவசாயத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சிவாவின் வயலுக்கு வந்த அதிகாரிகள் பால் வண்ணத்தில் வந்த நீரை ஆராய்ச்சிக்காக எடுத்து சென்றுள்ளன்னர். இதனிடையே, வெங்கட சிவாவின் வயலில் தண்ணீருக்கு பதிலாக பால் வருவதாக செய்தி காட்டு தீ போல் பரவியதை அடுத்து ஊர் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.


Advertisement