பாஜக நிர்வாகியின் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி கொலை செய்த கும்பல்; நெஞ்சை பதறவைக்கும் கொடூர சம்பவம்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சசிபூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் சிங். இவர் பாஜக கட்சியில் பூத் கமிட்டி தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவரை 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கிய கும்பல், அவரின் மீது பைக்கை ஏற்றியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மர்ம கும்பலுக்கு வலை வீசியிருக்கின்றனர். இவர் தேர்தல் முன்விரோதம் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற விசாரணை நடந்து வருகிறது.