வேலைவாங்கி தருவதாக அழைத்துச்சென்று பயங்கரம்.. 27 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம்..!

வேலைவாங்கி தருவதாக அழைத்துச்சென்று பயங்கரம்.. 27 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம்..!


uttar-pradesh-noida-woman-sexual-abused

27 வயது இளம்பெண்ணுக்கு வேலைவாங்கித்தருவதாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டர் 27 பகுதியில் வசித்து வரும் இளம்பெண் பயின்றுவிட்டு வேலை தேடிக்கொண்டு இருந்துள்ளார். இதனை அறிந்த இளைஞர் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு வேலை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், தனது நயவஞ்சக பேசினால் பெண்ணுக்கு தன்மீது நம்பிக்கை ஏற்படும் வண்ணம் செயல்பட்டு இருக்கிறான். 

இதனையடுத்து, பெண்ணை அப்பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு வரச்சொல்ல, பெண் அங்கு வந்து காத்திருந்துள்ளார். அந்த சமயத்தில், பெண்ணை உணவகத்திற்கு அழைத்துச்சென்று தேநீர் சாப்பிட்டு வரலாம் என்று கூறியுள்ளான். இந்த தகவலை நம்பிய பெண்மணியும் உடன் செல்ல, கயவன் பெண்ணை விடுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

Uttar pradesh

இதனால் பதறிப்போன பெண்மணி கயவனின் பிடியில் இருந்து தப்பித்து வீட்டிற்கு சென்று சகோதரியிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் இளைஞன் சாகர் ஷபாஷை தேடி வருகின்றனர்.