2 கி.மீ நிர்வாணமாக நடந்த சிறுமி; 5 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ வைரல்.!

2 கி.மீ நிர்வாணமாக நடந்த சிறுமி; 5 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ வைரல்.!


Uttar Pradesh Moradabad Girl Gang Raped Walk Nude 2 Km to Home Video Trending

கூட்டுப்பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடைகள் கலையப்பட்ட நிலையில், அவர் 2 கி.மீ தூரம் நிர்வாணமாக நடந்து வீடுவந்து சேர்ந்த துயரம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, சம்பவத்தன்று பக்கத்து கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த 5 பேர் கும்பல் சிறுமியை கடத்தி காட்டுப்பகுதியில் வசித்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. 

பின்னர், அவரின் ஆடையை களைந்து நிர்வாணப்படுத்தி அடித்து துரத்தி இருக்கின்றனர். இதனால் சிறுமியும் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இரவு நேரத்தில் நிர்வாணமாக தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்த விஷயம் அங்குள்ள சி.சி.டி.வி கேமிரா காட்சிகளில் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் பேரில் இக்குற்றத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினரான நயூசி அலி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.