சமூக வலைத்தளத்தில் பழக்கம்; மைனர் சகோதரிகள் பலாத்காரம்.. வீடியோ எடுத்து பகிரங்க மிரட்டல்.!UP Noida minor girl Rape 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா மாவட்டத்தில் வசித்து வருபவர் ராகுல். இவரின் நண்பர் சூரஜ். இவர்களுக்கு சமூக வலைத்தளம் வாயிலாக இரண்டு சிறுமிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

சமூக வலைதள பழக்கம்:
இவர்கள் இருவரும் சகோதரிகள் ஆவார்கள். இவர்களுடன் பழகி வந்த இளைஞர்கள், சம்பவத்தன்று தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என சிறுமிகளை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். 

இதையும் படிங்க: 50 வயது நபர் குத்திக்கொலை; பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததால் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!

நேரில் சந்திக்க அழைத்து அதிர்ச்சி செயல்:
அங்கு இருவருக்குக்கும் குடிக்க குளிர்பானம் வழங்கப்பட்ட நிலையில், குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக்குடித்த சிறுமிகள் இருவரும் மயங்கி இருக்கின்றனர். 

பலாத்கார வீடியோ எடுத்து மிரட்டல்
பின் இளைஞர்கள் இருவரும் சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த நிலையில், அதனை வைத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.10 இலட்சம் பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். 

போக்ஸோவில் கைது:
ரூ.10 இலட்சம் வரை பணம் பறித்த கயவர்களின் தொல்லை தொடர்ந்ததால், சிறுமிகள் பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்து 15 வயது அக்காவை பலாத்காரம் செய்த 13 வயது தம்பி.. 3 மாத கர்ப்பிணியாக சிறுமி.!