50 வயது நபர் குத்திக்கொலை; பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததால் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!



Uttar Pradesh Muffazarnagar 15 Aged Minor Man Killed 50 Aged Baby 


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் பகுதியில் 15 வயதுடைய சிறுவன் வசித்து வருகிறான். இதே பகுதியில் 50 வயதுடைய நபர் வசித்து வருகிறார். 

இந்நிலையில், சிறுவனை ஐம்பது வயதுடைய நபர் பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிய வருகிறது. மேலும், சிறுவனை பலாத்காரம் செய்யும் வீடியோவை எடுத்து வைத்த முதியவர், அதனை காண்பித்து மிரட்டி இச்செயலை அரங்கேற்றி இருக்கிறார். 

15 வயது சிறுவன் பலாத்காரம்

கடந்த மே 20ஆம் தேதி சிறுவனை மிரட்டி தனது வீட்டிற்கு வரவழைத்தவர், வீட்டிற்கு வராத பட்சத்தில் வீடியோ ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் என மிரட்டி இருக்கிறார். இதனால் அங்கு வந்த சிறுவனை மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்து 15 வயது அக்காவை பலாத்காரம் செய்த 13 வயது தம்பி.. 3 மாத கர்ப்பிணியாக சிறுமி.! 

கயவனின் செயலால் ஏற்கனவே வெறுப்பில் இருந்த சிறுவன், ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முதியவரின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் நிலைகுலைந்து போனவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கழுத்தில் குத்தப்பட்டதில் பரிதாப பலி

இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுவனிடம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டபோது, சிறுவனுக்கு நடந்த துயரமும் அதனால் ஏற்பட்ட கொலை சம்பவமும் அம்பலமானது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையை தொடர்ந்து சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க: வளர்ப்பு மகளை 6 மாதமாக மிரட்டி சீரழித்த தந்தை; கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து நடந்த பயங்கரம்.!