தகாத உறவில் இருந்த மாமனார் - மருமகள்! அந்த விஷயத்தில் கணவருக்கு வந்த சந்தேகம்...... யோசிக்காமல் நொடியில் தீர்த்துக்கட்டிய வாலிபர்..!!!



up-man-shoots-father-wife-over-illicit-affair-suspicion

உத்தரபிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தில், தந்தை மற்றும் மனைவியை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருக்குள் நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகம் மற்றும் தகராறே இந்த இரட்டை கொலைக்கு காரணமாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அலிகரில் மருந்துக் கடை நடத்தி வந்த 28 வயதான மோமின் கான், தனது தந்தை முகமது ரியாசுதீன் மற்றும் மனைவி சனா ஆகியோரையே சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: "சரக்கடிக்க காசு குடுயா..." போதையில் எகிறிய மகன்.!! கல்லைப் போட்டு கதையை முடித்த தந்தை.!!

8 மாதங்களாக இருந்த சந்தேகம்

மோமின் கான் மற்றும் சனாவிற்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இரு வாரங்களுக்கு முன்புதான் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.

ஆனால், தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கள்ள உறவு இருப்பதாக மோமின் கான் சந்தேகித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குழந்தையின் தந்தை குறித்து அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தகவலின்படி, மனைவியின் செல்போனில் இருந்த சில புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மோமின் கானின் சந்தேகத்தை மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமாதான பேச்சுக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு

சம்பவத்தன்று சனாவின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே ஆத்திரமடைந்த மோமின் கான், தனது தந்தையின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து தந்தை மற்றும் மனைவியை நோக்கி சுட்டுள்ளார்.

இதில் முகமது ரியாசுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தப்பியோடிய இளைஞர் கைது

இரட்டை கொலைக்குப் பிறகு மோமின் கான் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் நடத்தி அவரை கைது செய்தனர்.

தற்போது மோமின் கான் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேச போலீசார் BNS 103 பிரிவின் கீழ் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!