ஒருத்திக்கு இத்தன்னை பேரா? ஆனால் ஒருத்தனையும் உயிருடன் விடல..மாமியார் கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்...!!!



up-jhansi-mother-in-law-murder-case-pooja-yadav

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே 60 வயதான சுசீலா தேவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கொள்ளை நோக்கில் நடந்த கொலை என கருதப்பட்ட இந்த வழக்கில், விசாரணை முன்னேறியபோது மருமகள் பூஜா ஜாதவின் பெயர் வெளியாகி போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார், சம்பவத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மயக்க மருந்து கொடுத்து கழுத்து நெரித்து கொலை

தகவலின்படி, சுசீலா தேவிக்கு முதலில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். வீட்டில் இருந்த நகைகளும் மாயமாகியிருந்ததால், ஆரம்பத்தில் இது கொள்ளை முயற்சியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

ஆனால், மருமகள் பூஜா ஜாதவ் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்குப் பின்னாலிருந்த பல அதிர்ச்சி தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 40 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 67 வயது முதியவர்! அடுத்து பண்ணை வீட்டில் நடந்த அதிர்ச்சி! முதியவர் போட்ட பலே நாடகம்! விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

முன்னாள் கணவர் கொலை முயற்சி வழக்கும் வெளிச்சம்

போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, பூஜா ஜாதவின் கடந்தகாலமும் சர்ச்சைகளால் நிரம்பியுள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த முதல் கணவரை கூலிப்படை மூலம் கொல்ல முயன்ற வழக்கில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தபோது, நீதிமன்றத்தில் கல்யாண் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு பிறகு கல்யாண் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நிலத் தகராறால் நடந்த கொலை?

கல்யாணின் மரணத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் உதவி கேட்டு சென்ற பூஜா, பின்னர் கல்யாணின் அண்ணன் சந்தோஷை திருமணம் செய்து கொண்டுள்ளார். சந்தோஷுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தும், பூஜாவை மணந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கல்யாணுக்கு சொந்தமான 8 பிகா நிலம் விற்பனை செய்யும் விவகாரத்தில் குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த நிலத்தை விற்க சந்தோஷும் அவரது தந்தையும் சம்மதித்த நிலையில், சுசீலா தேவி மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மோதலே கொலையில் முடிந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த ஜூன் 24 அன்று திட்டமிட்டு சுசீலா தேவியை கொலை செய்ததாக பூஜா ஜாதவ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு உதவியவர்கள் யார், கொலைக்கு முன் நடந்த திட்டமிடல் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: வீட்டுக்கு பாடம் நடத்த வந்த டீச்சர் குடித்த ஜூஸ்ஸில் மயக்க மருந்து! ஆண்மை ஊக்க மருந்து உட்கொண்ட 10 ஆம் வகுப்பு மாணவர்கள்... இரவு முழுவதும் செய்த வெறிச்செயல்!!!