கேரள விமான விபத்தில் தப்பிப் பிழைத்த இரட்டைச் சிறுவர்கள்!

கேரள விமான விபத்தில் தப்பிப் பிழைத்த இரட்டைச் சிறுவர்கள்!


Twin boys saved from flight accident

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையிலிருந்து விலகியதால் விபத்து ஏற்பட்டு விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து விழுந்துள்ளது. இந்த விமான விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த விமானத்தில் குழந்தைகளும் பயணித்துள்ளனர். அந்த விமானத்தில் 7 வயதான ஜெய்ன் மற்றும் ஜெமில் என்ற அந்த இரட்டைச் சிறுவர்கள் அவர் தாயுடன் பயணம் செய்துள்ளனர். இந்த கொடூர விபத்தில் இரட்டைச் சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர். அவர்களின் தாய் உயிர் பிழைத்துள்ளாரா என்று தெரியவில்லை. 

flight accident

அந்தச் சிறுவர்கள் இருவருக்கும் காலில் லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களுடைய  உறவினர் ஒருவர் அந்த இரட்டைச் சிறுவர்க்ளை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச்சென்றார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.