இந்தியா

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் அறிவுறுத்தல்!

Summary:

Trump advises Imran Khan to negotiate with India

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்த அவர் தற்போது இம்ரான் கானுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவர்களின் உரையாடல் ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்தும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலை குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "எனது இரண்டு நல்ல நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் வர்த்தகம் தொடர்பாகவும் மிக முக்கியமாக காஷ்மீரில் பதற்றத்தை குறைப்பது தொடர்பாகவும் பேசினேன். ஒரு கடினமான சூழ்நிலை, ஆனால் நல்ல உரையாடல்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
 


Advertisement