இந்தியா

அடேங்கப்பா! டிக்டாக் செயலியால் குட்டி சரோஜா தேவி இளம்பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! வைரலாகும் வீடியோ.

Summary:

Tiktok

இன்றை தலைமுறையினர் அனைவரையும் அடிமையாகி வைத்துள்ளது டிக்டாக் செயலி. இந்த செயலியின் மூலம் சிறுவர் முதல் வயதான தாத்தா, பாட்டி வரை அனைவரும் ஒரு வித்தியாசமான கெட்டப்பில், பலவிதமான பாடல், வசனத்தை பேசி வீடியோவாக வெளியிட்டு பிரபலமாகி வருகின்றனர்.

இந்த செயலியில் ஆபாசம் உள்ளது என்று சிலர் கூறினாலும் இன்னும் சிலர் இந்த செயலியின் மூலம் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது என்றும் கூறி வருகின்றனர். மேலும் இந்த செயலியின் மூலம் பலருக்கு சினிமாவில் பணியாற்ற வாய்ப்பும் கிடைத்துள்ளது.

அதேபோல் தற்போது லலிதாகிருஷ்ணா என்ற இளம்பெண் பழைய கால ஹுரோயின் போல வேடமிட்டு கொண்டு அவர்களை போல மேக்கப் செய்து நடிப்பது, நடனம் ஆடுவது என்ற செயலை செய்து வந்தார். இதனால் இவருக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் உருவானார்கள்.

மேலும் அந்த பெண் பாண்டிச்சேரியை சேர்ந்தவர். பரதநாட்டியத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறாராம். அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் அம்மாவுக்கு பழைய பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் நடிகைகள் போல வேடமிட்டு நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரை சிலர் குட்டி சரோஜா, பானுமதி என்றெல்லாம் அழைத்து வருகின்றனர். மேலும் படத்திலும் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.


Advertisement