இந்தியா

3 பெண்களும் பார்க்கத்தான் டீசென்ட்டு!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! ச்சீ ச்சீ.. ஹரியானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..

Summary:

வயதான முதியவரை நிர்வாணமாக படம் எடுத்து, அவரை மிரட்டி பணம் பறித்த மூன்று பெண்களை போலீசார் க

வயதான முதியவரை நிர்வாணமாக படம் எடுத்து, அவரை மிரட்டி பணம் பறித்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் , யமுனா நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட  புது ஹமிதா காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். முதியவரின் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது.

இதனால் முதியவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். இதனை அறிந்துகொண்ட மூன்று பெண்கள், போலீசார் உடையில் அந்த முதியவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தாங்கள் காவலர்கள் எனவும், ஆடைகளை கழற்றும்படியும் அந்த முதியவரை மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அந்த முதியவர், வேறு வழியில்லாமல் அந்த பெண்கள் கூறியபடி செய்துள்ளார். இதனை அடுத்து, அந்த முதியவரை நிர்வாணமாக்கி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த அந்த பெண்கள், அதனை அந்த முதியவரிடம் காட்டி, 5 லட்சம் பணம் கொடுக்கவேண்டும் எனவும், இல்லையெனில் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

வேறு வழியில்லாமல் அந்த முதியவர் முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, மீதியை விரைவில் தருவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் அந்த முதியவர் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் அந்த மூன்று பெண்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement