நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வெளியே எடுக்கப்பட்ட 1300 கோடி..! மோசமான நிலைக்கு சென்ற பிரபல வங்கி..! 50 ஆயிரம் எடுக்க திண்டாடும் மக்கள்.!

இந்தியாவில் இயங்கிவரும் பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றனா எஸ் பேங்க் மோசமான நிதிநிலை காரணமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், வாங்கி கணக்கில் இருந்து தற்போதைக்கு 50 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கிங் இந்த திடீர் நிலமையால், சம்பள பணத்தை கூட எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், எஸ் பேங்கில் இருந்து திருப்பதி தேவஸ்தானம் மொத்தமாக ரூபாய் 1300 கோடியை கடந்த மாதம் எடுத்துள்ள விவரம் தற்போது வெளியாகி.
கடந்த சில மாதங்களாக எஸ் பேங்கிங் நிலைமை சரியில்லாததை உணர்ந்த திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தகவல் அளித்த பின்னர், எஸ் பேங்கில் இருந்து சுமார் 1,300 கோடியை வெளியே எடுத்துள்ள சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.