அரசியல் இந்தியா Covid-19

திருப்பதி தொகுதி எம்.பி. கொரோனாவால் பலி! உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தொற்றால் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பல்லி துர்காபிரசாத் ராவ் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று மாலை கிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் பல்லி துர்காபிரசாத் ராவ் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில துணை முதல் - மந்திரி கே.நாராயண சுவாமி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் பல்லி துர்காபிரசாத் ராவ் மறைவிற்கு பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், “மக்களவை உறுப்பினர் பல்லி துர்கா பிரசாத் அவர்களின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியது. அவர் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர். ஆந்திராவின் வளர்ச்சியில் அவரது பங்கு மிக அதிகம். எனது எண்ணம் முழுவதும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீதே உள்ளது. ஓம் சாந்தி" என குறிபிட்டுள்ளார். 


Advertisement