தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
சேர்ந்து வாழாததால் ஆத்திரம்: முன்னாள் மனைவியை கைகளை கட்டி பால்கனியில் இருந்து தூக்கி வீசிய கொடூரன்..!
முன்னாள் மனைவியை கைகளை கட்டி பால்கனியில் இருந்து தூக்கி வீசி கொன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரித்திகா சிங் ஆக்ராவில் உள்ள தாஜ் கஞ்ச் ஆரோவில் அடுக்குமாடி அப்பார்ட்மெண்டில் உள்ள நாலாவது மாடியில் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிக பிரபலமானவர். 30 வயதான இவர் சமூக வலைத்தளத்தில் 44000 பாலோயர்களை வைத்துள்ளார். மேலும் ரித்திகா ஃபேஷன் மற்றும் உணவு, பயண ஆலோசனைகளை வழங்கிவருகிறார். கிருத்திகா 2014 லில் ஃபிரோசாபாத்தை சேர்ந்த ஆகாஷ் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பிறகு இருவருக்கும் ஒத்துவரவில்லை என்று தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் பேஸ்புக் மூலம் அறிமுகமான விபுல் அகர்வால் என்ற நபருடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். நிலையில் நேற்று ரித்திகாவின் முன்னாள் கணவர், ஆகாஷ் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர், ரித்திகா வாழ்ந்து வந்த பிளாட்டுக்குள் புகுந்து விபுல் மற்றும் ரித்திகாவை தாக்க ஆரம்பித்தனர். மேலும் விபுலை பாத்ரூமில் வைத்து பூட்டிவிட்டு ரித்திகா வின் கைகளை கயிற்றால் கட்டி அவரை பால்கனியில் இருந்து தூக்கி வீசினார்.
இதில் ரித்திகா ரத்த வெள்ளத்தில் பலியானார். சத்தம் கேட்டு குடியிருப்பில் இருந்தவர்கள் கூடிவிட்டனர். இதை பார்த்த இரண்டு பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அங்கிருந்தவர்கள் ஆகாஷ் மற்றும் இரண்டு பெண்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். ரித்திகா சிங் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.