சூப்பரோ சூப்பர்.. மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?
லேசான முன்னேற்றம்.. பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்.!

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த 10 ஆம் தேதி உடல்நிலை மிக மோசமான நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமான நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் மூலம் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறப்பு மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.