நீதிமன்ற விசாரணைக்கு சென்ற சிறுமி; கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட கொடூரம்..!

நீதிமன்ற விசாரணைக்கு சென்ற சிறுமி; கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட கொடூரம்..!


The girl went to the court hearing; The brutality of the body found in the canal..

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் சந்தனா பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக கடந்த 18-ஆம் தேதி அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து நீதிமன்றம் செல்ல வந்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீட்டிற்கு வரவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காணமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற விசாரணைக்காக கடந்த 18-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய அந்த சிறுமி இன்று சீதாபூர் மாவட்ட எல்லையில் இருக்கும் காசிபூர் பிஹ்டா என்ற கிராமத்தில் இருக்கும் கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து சிறுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி தான் அவரை கொலை செய்து கால்வாயில் வீசி விட்டு சென்றதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்காக சென்ற  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.