பேருந்து மோதி உயிரிழந்த குப்பை சேகரிக்கும் நபர்... உடலை குப்பை லாரியில் ஏற்றிய போலீசார்..! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்...!

பேருந்து மோதி உயிரிழந்த குப்பை சேகரிக்கும் நபர்... உடலை குப்பை லாரியில் ஏற்றிய போலீசார்..! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்...!


the-garbage-collector-death-issue

பேருந்து மோதி குப்பை சேகரிக்கும் நபர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை காவல்துறையினர் குப்பை லாரியில் எடுத்து சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் பிரதாப் நகர் பகுதியில் நேற்று குப்பை சேகரிக்கும் நபர் ஒருவர் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை ஏற்றி செல்ல மருத்துவ ஊர்திக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால் மருத்துவ ஊர்தி வராத காரணத்தால், தாமதிக்காமல் உடலை குப்பை லாரியிலேயே ஏற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.டி.எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அது வைரலாகியது. 

rajasthan

வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் ராஜஸ்தான் காவல்துறையினரின் இரக்கமற்ற இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தங்களது உணர்ச்சிபூர்வமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஜோத்பூர் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க ஜோத்பூர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுக்கு ராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.