AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
இதோ வந்தாச்சு இந்த வருடத்துக்கான பிக்பாஸ் அப்டேட்!! தொகுப்பாளர் யார் தெரியுமா?
சிறிய திரையில் பிரமாண்ட உருவாக்கத்துடன் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9ஆவது சீசன் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தரமான போட்டியாளர்களுடன் 100 நாட்கள் வரை நடைபெறுகிறது. 15 போட்டியாளர்கள் தங்கும் வீட்டில் தினசரி சவால்கள், டாஸ்க்குகள் மூலம் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

கடைசியாக ஒளிபரப்பான 8வது சீசன் ஜனவரி மாதம் முடிவடைந்தது. அதில் முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார், இதற்கு முன் சீசன்களில் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருந்தார்.
இதையும் படிங்க: வீட்டிற்கு வந்த சோழனை அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா! அடுத்து சோழன் போட்ட பக்கா பிளான்! அய்யனார் துணை புரோமோ...
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, விஜய் சேதுபதியே இந்த சீசனுக்கும் தொகுப்பாளராக செயல்பட உள்ளார். இந்த புதிய சீசனுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த சீசனில் புதிய அரங்குகள், புதுமையான டாஸ்க்குகள், வித்தியாசமான விதிமுறைகள் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த 9வது சீசன் மீதான ஆவலும் உயர்ந்து வருவதைக் காண முடிகிறது.
இதையும் படிங்க: என் பொண்டாட்டியும் அப்படிதான்! இரவு சண்டை.. காலையில பார்த்தா! நடிகர் விஜய்சேதுபதி தனது மனைவியுடன் நடந்த சண்டையை பற்றி ஓபன் டாக்!