ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
சினிமாவாகிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை.! ஹீரோ இவரா.! வெளிவந்த போஸ்டர்!!
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரது வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மருத்துவராக இருந்து பின்னர் அரசியல்வாதியாக களமிறங்கிய டாக்டர் ராமதாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளனர்.
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ்
அதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாசின் ஆரம்பகால வாழ்க்கை, அரசியலில் மேற்கொண்ட பிரச்சாரங்கள், போராட்டங்கள் ஆகியவை படமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தை பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் இயக்க உள்ளார். மேலும் படத்திற்கு அய்யா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாநதி சீரியல் நடிகை வைஷாலிக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு விழா ! பிரபலங்கள் வாழ்த்து கூறி என்ன பேசி உள்ளனர் பாருங்க! வைரலாகும் வீடியோ...
சினிமாவாகும் வாழ்க்கை வரலாறு
அய்யா படத்தை தமிழ் குமரன் தயாரிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் டாக்டர் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகரும், பிக்பாஸ் வின்னருமான ஆரி நடிக்கிறார். இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பெண்கள் போட்ட திட்டம் எல்லாம் வீணாப்போச்சே! தர்ஷனின் நிலைமை என்னவாகும்! எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ...