ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
நம்பரை போனில் சேவ் பண்ணாமலே வாட்சாப்பில் இருந்து எப்படி மெசேஜ் அனுப்புவது தெரியுமா? இதோ..
WhatsApp உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி பரிமாற்ற பயன்பாடுகளில் ஒன்றாகும். ஆனால் இதில் பலருக்கும் தெரியாத சில ரகசிய அம்சங்கள் உள்ளன. இவை உங்கள் பயன்பாட்டை இன்னும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்.
தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாக்க Disappearing Messages அம்சத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் 24 மணி, 7 நாட்கள் அல்லது 90 நாட்களில் தானாகவே செய்தி நீங்கும். மேலும், View Once அம்சத்தின் மூலம் ஒருமுறை பார்த்தவுடன் நீங்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பலாம்.

குறிப்பிட்ட உரையாடல்களை Fingerprint அல்லது Face ID மூலம் பூட்டும் வசதியும் உள்ளது. தவறாக அனுப்பிய செய்திகளை 15 நிமிடங்களுக்குள் திருத்தும் வாய்ப்பும் WhatsApp வழங்குகிறது. ஒரே மொபைலில் இரண்டு WhatsApp கணக்குகளை இயக்கும் புதிய வசதி தனிப்பட்ட மற்றும் தொழில் தொடர்புகளைப் பிரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: இந்த மீன்களை சாப்பிட்டால், மரணம் கூட தள்ளிப் போகும்.! ஏன் தெரியுமா.?!
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை HD தரத்தில் அனுப்பும் வசதி தரம் குறையாமல் அனுப்ப உதவுகிறது. முக்கிய குறிப்புகள் மற்றும் கோப்புகளை சேமிக்க தனக்குத் தானே மெசேஜ் அனுப்பும் வசதியும் உள்ளது.
wa.me/மொபைல் எண் மூலம் சேமிக்காத எண்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பலாம். அதாவது, உங்கள் தொலைபேசியில் இருந்து ஏதாவது ஒரு பிரௌசரை (Google Chrome) ஓபன் செய்து, அதில் https://wa.me/9876543210 என்று பதிவிடவும் (9876543210 என்பதற்கு பதிலாக நீங்கள் செய்தி அனுப்ப வேண்டிய தொலைபேசி நம்பரை பதிவிடவும்) பின்னர் என்டர் பட்டனை க்ளிக் செய்வதன் மூலம், உங்கள் வாட்சாப் திறக்கப்பட்டு, நீங்கள் பதிவிட்டுள்ள நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி காட்டப்படும்.
Read Receipts-ஐ அணைத்து வைப்பதன் மூலம் Blue Tick தெரியாமல் செய்திகளைப் படிக்கலாம். இந்த அம்சங்கள் WhatsApp பயன்பாட்டை அறிவார்ந்ததும் பாதுகாப்பானதும் ஆக்குகின்றன, மேலும் தினசரி பயன்பாட்டில் அதிக வசதியை வழங்குகின்றன.
இதையும் படிங்க: BP மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாமா? இதை தெரிஞ்சுக்கோங்க!