பீகார் மாநிலத்தில் பயங்கரம்... 4 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை... காவல்துறை தீவிர விசாரணை.!



terrible-in-the-state-of-bihar-four-year-old-boy-shot-d

பீகார் மாநிலத்தில் நான்கு வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பிதான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிம்ஹா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் விபின் குமார் என்பவரின் நான்கு வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Bihar

 அச்சம்பவம் நடந்த தினத்தன்று சிறுவன் தனது தாத்தாவை பார்க்க சென்றபோது அங்கு வந்த மருமநபர் ஒருவர் சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் சிறுவன் இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளான் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்  இதனைத் தொடர்ந்து  மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Bihar

மேலும் சிறு நாக பஞ்சமி திருவிழாவிற்கு சென்று வந்ததாகவும் அப்போது அருகில் இருந்த ராமானந்த் என்பவரின் கடைக்கு சென்றபோது யாதவ் என்பவரின் மகன் சோட்டு  சிறுவனை துப்பாக்கியால் சுட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.