"King 527" கேமை விளையாடி ரூ.95 இலட்சம் இழந்த விவசாயி மகன்.. நிலமும், பணமும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்.!

"King 527" கேமை விளையாடி ரூ.95 இலட்சம் இழந்த விவசாயி மகன்.. நிலமும், பணமும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்.!



Telangana RangaReddy Student Loss Money Rs 95 Lakh Game Online King 527

 

கேடுகெட்ட செல்போன் ஆதிக்கத்தாலும், கேம் மோகத்தாலும் விவசாயியின் குடும்பமே நடுதெருக்கு வந்த சோகம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், ஷாபாத் மண்டல் சீதாராம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான நிலத்தை, அரசு நெடுஞ்சாலை பணிக்காக எடுத்துக்கொண்டுள்ளது. இந்த நிலத்திற்கான தொகையாக ரூ.95 இலட்சம் விவசாயியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயியின் மகன் தனியார் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், அவர் எந்நேரமும் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இவ்வாறாக அவர் King 527 என்ற ஆன்லைன் கேமை விளையாடியதாக தெரியவருகிறது. 

Telangana

அவருக்கு கேமில் ஒருகட்டத்திற்கு மேல் பணம் தேவைப்பட, தனது தந்தையின் வங்கிக்கணக்கை இணைத்து பணத்தை செலவு செய்து விளையாடி இருக்கிறார். இவ்வாறாக ரூ.95 இலட்சமும் இழக்கப்பட்டுள்ளது. பணம் அனைத்தையும் இழந்தபின் விவசாயிக்கு உண்மை தெரியவந்துள்ளது. 

இதனால் குடும்பமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், தாங்கள் நம்பியிருந்த நிலமும் அரசால் கையகப்படுத்தப்பட்டுவிட, அதனால் வந்த பணத்தையும் இழந்து தவிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். கேடுகெட்ட கேமுக்கு அடிமையான கொத்தடிமை மகனால் விவசாயி வீதிக்கு வந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.