காதலனுக்காக இதையுமா செய்வீங்க?.. பெண் செய்த காரியத்தால் பகீர்.. இதல்லவோ ஆத்மார்த்த காதல்.!

காதலனுக்காக இதையுமா செய்வீங்க?.. பெண் செய்த காரியத்தால் பகீர்.. இதல்லவோ ஆத்மார்த்த காதல்.!


Telangana Hyderabad Love Couple Arrest by Police Smuggling Drug to Love Boy

தனது காதலனுக்காக போதைப்பொருள் கடத்தி வந்த காதலி, காதலன் என 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண், விசாகப்பட்டினம் நகரை சேர்ந்த காதலர் ஹேமந்த் குமாருக்காக போதை மாத்திரையை விமானத்தில் கடத்துவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விமான நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள், பெண்ணின் வருகைக்காக காத்திருந்துள்ளனர்.

அப்போது, காரில் வந்த பெண்ணுடன் பேச வந்த ஹேமந்த் குமார், பெண்ணிடம் இருந்து 2 கிராம் அளவிலான போதை பொருள் மற்றும் 18 போதை மாத்திரையை வாங்கியுள்ளார். சம்பவ இடத்தில் ஏற்கனவே கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Telangana

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விசாகப்பட்டினம் பகுதியில் போதை பொருளை உபயோகம் செய்ததாக காவல் துறையினர் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், காதலனுக்காக போதைப்பொருள் கடத்தி வந்த காதலி மற்றும் அவரது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.