இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா.? கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் கடுப்பான சுப்ரமணியன் சுவாமி.!

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா.? கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் கடுப்பான சுப்ரமணியன் சுவாமி.!



subramanya swami talk about corona vaccine

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என உலக சுகாதார அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி,இன்று  நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் ,சீரம் நிறுவனம் , பைசர் நிறுவனங்கள்  தடுப்பூசி தயாரித்து உள்ளன.

இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருகின்றன. இந்தநிலையில், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு 3 நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனால் இந்தியாவில்  கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கூட உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்காத நிலையில், தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என தெரிவித்துள்ளார்.