பள்ளியில் திடீரென கதறி கூச்சலிட்டு, உருண்டு புரண்ட மாணவிகள்! ஏன்? என்னாச்சு.! பதறவைக்கும் வினோத வீடியோ.!Students crying in school video viral

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவிகள் திடீரென மிகவும் வினோதமாக கூச்சலிட்டு, தரையில் உருண்டு புரண்டு, சத்தம் போட்டு கதறி அழுதுள்ளனர். இதனை கண்டு பள்ளி ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

உடனே இதுகுறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. பின்னர் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதிரியார் அழைத்து வரப்பட்டு மாணவிகளை சாந்தப்படுத்தவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மாணவிகள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்துள்ளனர். அதனை தொடர்ந்து மருத்துவக்குழுவினர் பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

பின்னர் ஒரு விதமான மனப்பிரச்சினையால் மாணவிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.  ஒருவர் பாதிக்கப்படும் போது அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு வினோதமாக நடந்து கொள்வர். இது உணர்ச்சி அல்லது உளவியல் அழுத்தத்தால் தூண்டப்படும்  பிரச்சினை என கூறியுள்ளனர்.

மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அவர்களுடன் படித்த தோழி மூழ்கியுள்ளார். அந்த சம்பவத்தில் இருந்து வெளியே வராமல் மாணவிகள் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அதனாலேயே இவ்வாறு கத்திக் கூச்சலிட்டு, உருண்டு புரண்டு வினோதமாக நடந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் மாணவிகள் கதறி அழுத வீடியோ இணையத்தில் பரவி பார்ப்போரை பதற வைத்து வருகிறது.