ஊரடங்கை மீறி தாய் செய்த தவறு! போலீசாரிடம் மாட்டிவிட்ட 6, வயது மகன்!

உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மே 17 ஆம் வீதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். நாட்டில் உள்ள அணைத்து கல்வி நிலையங்கள், பல்கலை கழகங்கள், அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் ஊரடங்கை கண்காணிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த சிறுவனை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, தனது அம்மா, தன்னை கட்டாயப்படுத்தி டியூஷனுக்கு அனுப்புவதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் சிறுவனை அழைத்துக் கொண்டு டியூஷன் ஆசிரியை வீட்டிற்கு சென்று ஊரடங்கை மீறி டியூஷன் எடுக்கக் கூடாது என்று எச்சரித்தனர். மேலும் சிறுவனின் தாயை அழைத்து பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.