பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி அவஸ்தைபட்ட நீள பாம்பு! இறுதியில் நேர்ந்த அதிசயம்! மில்லியன் பேரை அதிரவைத்த வீடியோ!

பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி அவஸ்தைபட்ட நீள பாம்பு! இறுதியில் நேர்ந்த அதிசயம்! மில்லியன் பேரை அதிரவைத்த வீடியோ!


snake-swallowed-plastic-bottles

தற்காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் இதனால் மனிதர்களுக்கு மட்டுமின்றி பூமியில் வாழும் பல உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. கடல்களில் தேங்கும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் கடலின உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மற்றும் திமிங்கலம் உட்பட பல்வேறு உயிரினங்களும் உயிரிழப்பது என தொடர்ந்து பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது.

அதுமட்டுமின்றி நிலத்திலும் ஆடு, மாடு போன்ற பல விலங்குகள் பெருமளவில் பாதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் பாம்பு ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலை முழுங்கிவிட்டு அவதிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது பாம்பு ஒன்று பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை விழுங்கியுள்ளது. பின்னர் அது செரிமானம் ஆகாத நிலையில் மிகவும் அவஸ்தைபட்ட அந்த  பாம்பு, பாட்டிலை மீண்டும் வெளியே கொண்டு வந்து துப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த பாட்டிலில் பாம்பை கவரும் வகையில் முட்டை போன்ற ஏதேனும் பொருட்களின் நறுமணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.