அந்த மனசுதான் சார் கடவுள்!! கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத சிறுவன்!! அது ஏன்னு இந்த வீடியோவை பாருங்க..

அந்த மனசுதான் சார் கடவுள்!! கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத சிறுவன்!! அது ஏன்னு இந்த வீடியோவை பாருங்க..


Small boy crying for taking chickens to sell

தான் வளர்த்த கோழிகளை வெட்டுவதற்கு கொண்டு செல்ல வேண்டாம் என சிறுவன் ரோட்டில் கதறி அழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெற்கு சிக்கிமின் மெல்லி பகுதியில் வாழும் மக்களிடம் பொதுவாக  கோழிகள் வளர்ப்பது மிக முக்கியமான தொழிலாக உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்துவந்துள்ளனர். தனது பெற்றோருடன் சேர்ந்து 6 வயது சிறுவனும் அந்த கோழிகளை வளர்த்து வந்துள்ளான். 
 
கோழிகள் பெரிய கோழிகள் ஆனதும் சிறுவனின் பெற்றோர் அந்த கோழிகளை விற்பனை செய்வது வழக்கம். அப்படியாக அவரது தந்தை அந்த கோழிகளை பிராய்லருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த கோழிகளை  பிராய்லர்காரர்கள் வந்து எடுத்து செல்லும் போது அதனை பார்த்த அந்த சிறுவன்  அந்த கோழிகளை எடுத்து செல்ல வேண்டாம் என கதறி அழுதுள்ளான்.

ஒருகட்டத்தில் அவர்கள் அதை கண்டுகொள்லாததால் ரோட்டில் உட்கார்த்து கதறி அழுத்ததோடு, கோழிகளை எடுத்துச்செல்லவேண்டாம் என கையெடுத்து கும்பிடுகிறான். இந்த பிஞ்சு குழந்தை அந்த கோழிகள் மேல் வைத்திருந்த அன்பினால் அழும் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.