"டெல்லியின் ஈபில் டவர்" இன்று திறக்கப்பட்ட Signature பாலத்தின் சிறப்பம்சங்கள்!
"டெல்லியின் ஈபில் டவர்" இன்று திறக்கப்பட்ட Signature பாலத்தின் சிறப்பம்சங்கள்!

யமுனை ஆற்றின் குறுக்கே வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியை இணைக்கும் புதிய பாலமானது இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. மிகவும் உயரமான, அழகான கோபுரத்தை கொண்ட இந்த பாலம் டெல்லியின் ஈபில் டவர் எனவும் டெல்லியின் அடையாளச் சின்னம் எனவும் அழைக்கப்படுகிறது.
பாலத்தின் நடுவே இருக்கும் கோபுரத்தின் உச்சியிலிருந்து பாலத்தை இணைக்கும் இரும்பு கம்பிகள் பார்ப்போரின் கண்களுக்கு கண்கொள்ளாக்காட்சியாக அமைகிறது. 2004ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவு பெற்று இன்று மக்களின் பயன்பாட்டிற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் திறந்துவைக்கப்பட்டது.
பாரிஸ் நகரத்தில் ஈபிள் டவரில் இருந்து நகரத்தை சுற்றி பார்ப்பது போல் இந்த பாலத்தின் உச்சியிலிருந்து டெல்லியின் நகரத்தை மக்களால் பார்த்து ரசிக்க இயலும். பாலத்தின் உச்சிக்குச் செல்ல மக்களின் வசதிக்காக 4 தானியங்கி இயந்திரங்கள் அங்கே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலத்தில் சில சிறப்பு அம்சங்கள் இதோ:
1 . இந்தியாவில் சமச்சீரற்ற கம்பிகளால் உருவாக்கப்பட்டுள்ள முதல் பாலம் இதுவே ஆகும்.
2 . பாலத்தின் உச்சியில் 154 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டியில் இருந்து மக்கள் டெல்லி நகரத்தை பார்க்க முடியும். இந்த உயரமானது குதுப் மினாரை விட இரண்டு மடங்கு அதிகம். 575 மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தில் ஆங்காங்கே செல்பி எடுப்பதற்கு வசதியான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
3 . இந்த பாலத்தின் அமைக்கப்பட்டுள்ள 8 வழி சாலை ஆனது அவுட்டர் ரிங் ரோடு மற்றும் வாஜிராபட் சாலை இரண்டையும் இணைக்கிறது.
4 . இந்த பாலம் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்துடன் 127 மிகப்பெரிய இரும்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளது.