வேற லெவல்.. இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடலை கிட்டாரில் வாசித்து அசத்திய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்.! வைரல் வீடியோ!!



shen-watsan-playing-ilayaraja-song-in-guitaar

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன், இளையராஜாவின் புகழ் பெற்ற பிரபல பாடலான ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை கிட்டாரில் வாசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக திகழ்ந்து வருபவர் ஷேன் வாட்சன். இவர் ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி சென்னை ரசிகர்கள் மனதில் தனிஇடத்தை பிடித்தார். அதிலும் அவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில்  மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடியபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது, ஆனால் ரத்தம் வடிந்தாலும் அவர் சிறப்பாக விளையாடி வெற்றிக்காக போராடினார்.

இவ்வாறு தமிழ் ரசிகர்களிடையே நெருக்கமான அவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வுபெற்றுள்ளார். மேலும்  தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அதில் தொகுப்பாளர் அவரிடம் 'உங்களுக்கு வேறு ஏதேனும் சிறப்பான திறமை உள்ளதா? என கேட்டுள்ளார். உடனே அவர் அருகில் இருந்த கிட்டாரை எடுத்து ‘மூடுபனி’ படத்தில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை வாசித்துக் காட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.