சபரிமலையில் தரிசனம் செய்த திருநங்கைகள்; காலணியுடன் சென்ற போலீசாரால் பெரும் சர்ச்சை.!

சபரிமலையில் தரிசனம் செய்த திருநங்கைகள்; காலணியுடன் சென்ற போலீசாரால் பெரும் சர்ச்சை.!


saparimalai ayyappan kovil - kerala

சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருநங்கைகளின் பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் காலணி அணிந்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இன்றும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

tamilspark

இந்நிலையில் இந்து அமைப்புகளின் எதிர்ப்புகளை மீறி கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 4 திருநங்கைகள் ஞாயிற்றுக்கிழமை சபரிமலை சென்றனர். இந்நிலையில் பம்பையில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கருப்பு நிற உடை அணிந்து மாலை அணிந்திருந்த திருநங்கைகள் இன்று போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எதிர்ப்புகளையும் மீறி அவர்கள் கோவிலுக்கு சென்றது ஒருபுறமிருந்தாலும் அவர்களுடன் பாதுகாப்புக்காக சென்ற போலீசார்கள் தங்களது காலணிகளை அகற்றாமல் அப்படியே கோவிலுக்குள் சென்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

tamilspark

காலணிகளுடன் சன்னிதானம் சென்ற போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்