அட கொடுமையே... 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! சமஸ்கிருத ஆசிரியர் தலைமறைவு.!!



sanskrit-teacher-sexually-abuse-7-students-police-enqui

ஒடிசா மாநிலத்தில் 7 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சமஸ்கிருத ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்திலுள்ள பள்ளியில் பயின்று வரும் 7 மாணவிகள் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகாரளித்தனர். அந்த புகாரில், பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வரும் நபர் தங்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் சமஸ்கிருத ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

India

இதனைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையிடம் தலைமை ஆசிரியர் மூலம் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முன்னரே அறிந்த சமஸ்கிருத ஆசிரியர் விடுமுறை எடுத்து விட்டு தலைமறைவாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு.!! கல்லூரி மாணவி மீது பலாத்க்கார முயற்சி.!! நிர்வாக அதிகாரி தலைமறைவு.!!

மேலும் அந்த சமஸ்கிருத ஆசிரியர் பல மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அவரை எச்சரித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "வாத்தியார் செய்யுற வேலையா இது..." +1 மாணவிக்கு பாலியல் சீண்டல்.!! கணித ஆசிரியர் கைது.!!