அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண தொகையை அறிவித்த பிரதமர் மோடி.!
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தநிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மாநில அரசுகள் உதவ முன் வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயதை அடைந்ததும் ரூ.10லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.