முதலிரவு அறையில் மயங்கிய விழுந்த மணமகள்! நண்பன் பேச்சை கேட்டு மாப்பிள்ளை செய்த அதிர்ச்சி செயல்.... இறுதியில் நடந்த எதிர்பாராத சம்பவம்...!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் திருமணமான புதுமண தம்பதியரைச் சுற்றி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில் மணமகள் மயங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தேகம், இறுதியில் கிராமப் பஞ்சாயத்து வரை சென்றுள்ளது.
திருமண நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு மணமகள் கணவர் வீட்டிற்கு வந்தடைந்தார். அப்போது அதிக வெயிலும், தொடர்ந்து நடந்த சடங்குகளாலும் உடல் சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 16 வயதில் திருமணமான இளம்பெண்! கணவர் வீட்டில் நாளுக்கு நாள் நரக வேதனை.... வாந்தி எடுத்த மறுநாளே மரணம்! திருமணமான 2 வருஷத்தில் நேர்ந்த கொடூரம்!!!
மயக்கம் ஏற்பட்டதால் தொடங்கிய சந்தேகம்
முதலிரவு அறையில் இருந்தபோது திடீரென மணமகளுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த மணமகன், தனது நண்பர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போது நண்பர்கள் சிலர் விளையாட்டாக, “இப்படி மயக்கம் வருவது கர்ப்பமாக இருந்தால்தான் இருக்கும்” என கூறியதாக தெரிகிறது. இந்த பேச்சைக் கேட்டதும் மணமகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கர்ப்ப பரிசோதனை கருவி வாங்கிய மணமகன்
இதையடுத்து அவர் அருகிலுள்ள கடைக்கு சென்று Pregnancy kit வாங்கி வந்து, மனைவியிடம் பரிசோதனை செய்யுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் கடும் கோபமடைந்து, நடந்த விஷயத்தை தனது அண்ணியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக மணமகன் வீட்டிற்கு வந்து விளக்கம் கேட்டனர். அதிகப்படியான வெயில் மற்றும் உடல் சோர்வு காரணமாகவே மயக்கம் ஏற்பட்டது என்றும், வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாயத்தில் ஒப்புக்கொண்ட தவறு
ஆனால் மணமகன் தனது சந்தேகத்தில் உறுதியாக இருந்ததால், விவகாரம் கிராம பஞ்சாயத்து முன் எடுத்துச் செல்லப்பட்டது. இரு குடும்பத்தினரிடமும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு, நண்பர்களின் பேச்சை நம்பி தவறாக நடந்துகொண்டதை மணமகன் ஒப்புக்கொண்டார்.
பஞ்சாயத்து முன்னிலையில் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்ட அவர், இனிமேல் இதுபோன்ற சந்தேகங்களுக்கு இடமளிக்கமாட்டேன் என்றும் உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.