பிஞ்சு குழந்தை சார் அது!! இப்படியா அடிக்கிறது!! இணையத்தில் வைரலாகும் ஆசிரியரின் வீடியோ!!



rajasthan-teacher-assaults-schoolgirl-video

ராஜஸ்தான் மாநிலம் லோஹாவத் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் சிறுமியைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பாடம் படிக்கவில்லை எனக் கூறி, மற்ற மாணவர்கள் முன்னிலையிலேயே அவர் சிறுமியை அடிக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் தாக்குதல்

லோஹாவத் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், படிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி ஆசிரியர் சிறுமியைத் தாக்குவது பதிவாகியுள்ளது. வகுப்பறையில் மற்ற குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதுள்ளது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

ஆசிரியர் மாணவியை இவ்வாறு தாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், தவறு செய்தாலும் குழந்தைகளை அடிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: திருமணத்துக்கு மறுத்த காதலி! 1000 அடி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்று காதலன் செய்த கொடூரம்..! செல்போனில் சிக்கிய மெசேஜ்ஜால் அம்பலமான உண்மை...! பகீர் சம்பவம்..!!!

ஆசிரியரின் செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

வீடியோ வைரலான நிலையில், இணையவாசிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் ஆசிரியரின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிகாரப்பூர்வ விசாரணை குறித்து தகவல் இல்லை

இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் கல்வித்துறை அல்லது உள்ளூர் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதா என்பது குறித்து இதுவரை தெளிவான அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதையும் படிங்க: கோவிலுக்குள் சிறுமிக்கு நடந்த கொடூரம்! வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்... அதிர்ச்சி வீடியோ!!!