ஐயோ... கட்டு கட்டாக குவித்து வைத்து பணத்தை எரிக்கும் கணவர்! எல்லாத்துக்கும் காரணமே மனைவி தானாம்... வைரல் வீடியோ..!!!
மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றதால் ஆத்திரமடைந்த கணவர் ஒருவர், வீட்டில் இருந்த கட்டுக்கட்டாக பணத்தை தீயிட்டு எரித்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறால் மனமுடைந்த அவர், இரவு நேரத்தில் பணக்கட்டுகளை எரித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
குடும்பத் தகராறால் ஏற்பட்ட விரக்தி
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளான அந்த நபர், வீட்டில் வைத்திருந்த பணத்தை எரிக்க முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: வாக்குவாதம் வன்முறையாகி சமையலறையில் நடந்த கத்திகுத்து..! ரத்த வெள்ளத்தில் சரிந்த 30 வயது பெண்.. கணவனின் வெறிச்செயல்..!!!
இரவு நேரத்தில் பணக்கட்டுகளுக்கு தீ
இரவு நேரத்தில் கட்டுக்கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளை ஒன்றாகக் குவித்து அவர் தீயிட்டு எரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வாழ்க்கைத் துணை அருகில் இல்லாதபோது பணத்தால் என்ன பயன் என்ற விரக்தியில் அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதற்கான முழுமையான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
ஒருபுறம் பலர் அன்றாட உணவுக்கே சிரமப்படும் நிலையில், குடும்பப் பிரச்சினைக்காக கட்டுக்கட்டாக பணத்தை எரிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பணத்தை இப்படி வீணடிப்பது குறித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Heartbroken man sets bundles of cash on fire at night
Gyan -Without love money means nothing
Part : After his wife left for her parents' home, this Rajasthan man took out all his anger on piles of cash sources claim.
Would you ever do this? pic.twitter.com/ZqNQgFopiO— Ramesh Speaks (@rameshofficial0) November 19, 2026