கணவனை பார்க்க செல்லும்போது கார் ட்ரைவருடன் மனைவிக்கு உண்டான கள்ளக்காதல்! பலே திட்டம் போட்டு 50 லட்சம் கொடு, இல்லையேல் பிணமாவாய்.... வெளியான பகீர் ஆடியோ !!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் குடும்ப வாழ்க்கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி அதிகாரியின் மனைவி, காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. ஆடியோ ஆதாரம் மற்றும் மிரட்டல் கடிதம் வழக்கை திருப்பியுள்ளது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் டாக்ஸி பயணம்... கள்ள உறவாக மாறியது
அல்வாரைச் சேர்ந்த கர்ணவ் கத்ரி மற்றும் அர்ச்சனா தம்பதியர் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெய்ப்பூரில் பணியாற்றும் கணவரை பார்க்க அர்ச்சனா அடிக்கடி கார் டாக்ஸியில் செல்வது வழக்கம். அந்த பயணங்களில் கார் ஓட்டுநர் ரிஷப் சர்மாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவே பின்னர் கள்ளக்காதல் உறவாக மாறியது என போலீஸ் கூறுகிறது.
நகைகள், பணத்துடன் மனைவி மாயம்
காதலனுடன் வாழ முடிவு செய்த அர்ச்சனா, கடந்த செப்டம்பரில் நகைகள் மற்றும் ₹5 லட்சம் பணத்துடன் தனது இளைய மகனை மட்டும் கூட்டிக்கொண்டு தலைமறைவானார். மனைவி காணவில்லை என கர்ணவ் போலீசில் புகார் அளித்தார். அதன்போது அவர் வழங்கிய ஆடியோ பதிவு வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
அந்த ஆடியோவில், கணவனை காரில் அழைத்து சென்று கொல்லும் கொலை சதி திட்டம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட போலீசாரே அதிர்ச்சியடைந்தனர்.
₹50 லட்சம் கேட்டு மிரட்டல்... இருவரும் கைது
இதையடுத்து, அர்ச்சனா தனது கணவருக்கு மிரட்டல் கடிதமும் அனுப்பியுள்ளார். அதில் ₹50 லட்சம் பணம் தர வேண்டும், இல்லையெனில் கணவனையும் அவரது தாயையும் கொன்று விடுவேன் என எச்சரித்துள்ளார். மேலும், குழந்தைகளை அனாதை இல்லத்தில் சேர்த்து காதலனுடன் வாழப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார், அர்ச்சனா மற்றும் ரிஷப் சர்மாவை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.