வயல்வெளியில் அடிக்கடி ரகசிய சந்திப்பு! 67 வயது முதியவரை மணந்த 19 வயது இளம்பெண்! அந்த பெண் சொன்ன அந்த வார்த்தை... இப்படியொரு காதலா..? கதறும் 90ஸ் கிட்ஸ்.!!!
பஞ்சாபில் 67 வயது முதியவர் ஒருவர், 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயது வித்தியாசம் இருந்தபோதும், இருவரும் காதலித்து இணைந்ததாக கூறப்படுகிறது. தற்போது பாதுகாப்பு கோரி அவர்கள் நீதிமன்றத்தை அணைந்துள்ளனர்.
வயல் பகுதியில் ரகசியமாக உண்டான உறவு
தகவலின்படி, அந்த இளம்பெண் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், தனது கணவரை விட்டு விலகி இந்த முதியவருடன் சென்றுள்ளார். இருவரும் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் ரகசியமாகச் சந்தித்து வந்த நிலையில், அங்கிருந்த மக்கள் அவர்களை நேரில் கண்டுள்ளனர். இதனால் அவர்களது தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது.
கிராமத்திலேயே நடந்த திருமணம்
இதையடுத்து, கிராம மக்கள் இருவரையும் அங்கேயே வைத்து திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. வயது வித்தியாசம் குறித்து கேள்விகள் எழுந்தபோதும், அவர்கள் தங்கள் உறவை காதல் திருமணம் என விளக்கினர். “வயது ஒரு இலக்கம் தான்” என தெரிவித்த இந்த ஜோடி, சேர்ந்து வாழ தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கும் மதம் மாறனும்.. கணவனை விட்டு ஓடிய 28 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!
பாதுகாப்பு கோரி நீதிமன்றம்
திருமணத்திற்குப் பிறகு, தங்களுக்கு உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என கருதிய இருவரும் உயர் நீதிமன்றம் அணைந்து பாதுகாப்பு கோரிக்கை வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் பேசிய இளம்பெண்,“அவருடைய மடியில் தலைவைத்துத் தூங்குவதையே நான் விரும்புகிறேன்” என்று தனது காதலை வெளிப்படுத்தி இந்த உறவை தனது விருப்பப்படி தேர்ந்தெடுத்ததாக தெரிவித்தார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.