உயிர் பிரிந்தது.. 84 வயதில் கொரோனாவுடன் நடந்த போராட்டம்..! முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்..!

உயிர் பிரிந்தது.. 84 வயதில் கொரோனாவுடன் நடந்த போராட்டம்..! முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்..!


Pranab Mukherjee ex-president and Congress veteran dies in Delhi hospital

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த 9ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பிரணாப் முகர்ஜி அவர்களின் மூளையில் இரத்தம் உறைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

Pranab mukarji

இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூளையிலிருந்து இரத்த கட்டிகள் வெற்றிகரமாக நீக்கப்பட்டது.  அதேநேரம் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

84 வயதாகும் பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்திய நாட்டின் 13வது குடியரசு தலைவராக 25 ஜூலை 2012 முதல் 25 ஜூலை 2017 வரை செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.