கடன் தொல்லையால் பரிதாபம்.. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் விபரீத முடிவு.. கண்ணீரில் குழந்தைகள்.!

கடன் தொல்லையால் பரிதாபம்.. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் விபரீத முடிவு.. கண்ணீரில் குழந்தைகள்.!


Pondicherry Separated Woman Suicide due to Debt Loan Issues

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வினோபா நகர், கப்ரால் வீதியில் வசித்து வருபவர் தங்கதுரை (வயது 47). இவர் புதுச்சேரி வேளாண்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தங்கதுரையின் மனைவி சத்ய பிரபா (வயது 43). 

தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 12 ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

Pondicherry

திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகரில் சத்யபிரபா குழந்தைகளோடு வசித்து வந்த நிலையில், தனியாக நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அதற்காக பலரிடம் கடன் வாங்கி தொழில் செய்த நிலையில் திடீர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட சத்யபிரபா, வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக கோரிமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.