இந்தியா

ஆசிரியர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில், இலைகளை கொண்டு மேடை அலங்காரம் செய்த மாணவர்கள்.!

Summary:

ஆசிரியர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில், இலைகளை கொண்டு மேடை அலங்காரம் செய்த மாணவர்கள்.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், கிராமப்புற பகுதியில் கிடைக்கும் தென்னை, பனை மரங்களில் இருந்து விழும் பொருட்களை பயன்படுத்தி கலைப்படைப்பை செய்து வருகின்றனர். 

பாய்மரக்கப்பல், சைக்கிள், விலங்குகள் மற்றும் நகைகள் போன்றவற்றையும் செய்து, பல்வேறு கண்காட்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். திருச்சி, சென்னை மற்றும் புதுச்சேரியின் பல நகர்களில் உள்ள தனியார் கல்லூரியில் கலை வகுப்புகளும் எடுத்துள்ளனர். 

இந்நிலையில், இந்த பள்ளியில் பயின்று வரும் ஆசிரியரின் வீட்டு திருமண நிச்சய விழாவில், இலையினால் ஏற்படுத்தப்ட்ட மேடை அலங்காரத்தை செய்துள்ளனர். இந்த மேடை அலங்காரம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. 

இதுகுறித்து நுண்கலை ஆசிரியர் உமாபதி வெளியிட்டுள்ள பதிவில், "கலைப்படைப்புகள் திருமணம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் இயற்கையினால் ஆன பொருட்களை வைத்து, விடுமுறை நாட்களில் மேடை அலங்காரம் பயிற்சி செய்து தருகிறோம். 

எங்களின் பள்ளி ஆசிரியர் வீட்டில் நடைபெற்ற திருமண நிச்சய விழாவில், மேடை அலங்காரத்தை அமைத்துள்ளோம். இம்மேடை வாழை இலை, தென்னை இல்லை மற்றும் மாந்தர இலைகளை கொண்டு வடிவைக்கப்பட்டுள்ளன. பள்ளியில் உள்ள 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து 5 மணிநேரத்தில் உருவாக்கினோம்" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement