மனைவியை கொன்றுவிட்டு நன்னடத்தையை ரிலீசான ரௌடி சிக்கியது எப்படி?.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்.!Pondicherry Rowdy Arrest Murder Case

 

கொலை வழக்கில் ஜாமினில் வந்து மனைவியை கொன்ற ரௌடி நன்னடத்தையில் வெளியிட்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரியில் வசித்து வரும் ரௌடி பாஸ்கர், கடந்த 2009ம் ஆண்டில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த 2016ல் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இடையில், கடந்த 2013ல் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், பாஸ்கர் ஜாமின் பெற்று வந்து சென்றதை தொடர்ந்து, அவரின் மனைவி மாயமாகி இருக்கிறார். தற்போது அவர் வேல்ராம்பட்டி அருகே இரவு நேரத்தில் பள்ளம் தோண்டி சடலம் ஒன்றை எடுத்து ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ளார். 

இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவரவே, பாஸ்கரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, கடந்த 2013ல் ஜாமினில் வெளியே வந்த பாஸ்கருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனைவியை கொலை செய்து வேல்ராம்பட்டி பகுதியில் உடலை புதைத்துள்ளார். தற்போது, அவர் சடலம் புதைத்த இடத்தின் மீது நெடுஞ்சாலை வருகிறது என பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த விஷயம் பாஸ்கருக்கு கலக்கத்தை ஏற்படுத்தவே, மனைவியின் உடலை தோண்டியெடுத்து ஏரியில் வீசியுள்ளார். இந்த விஷயத்தை பார்த்தவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, பாஸ்கர் கைது செய்யப்பட்டு உண்மை அம்பலமாகியுள்ளது. பாஸ்கர், 2 கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.