கற்பழிப்பு, கருக்கலைப்பு.. காதல் பெயரில் நடந்த காவலித்தனம்.. உயிர் ஊசல்.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம் பகுதியை சார்ந்தவர் சுந்தர் (வயது 24). இவர் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, காதலித்து வந்ததாக தெரியவருகிறது. மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், கருவை கலைக்க சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரையையும் வாங்கி கொடுத்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்ட சிறுமிக்கு வீட்டில் வைத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர் சிகிச்சை அளித்த பின்னரே, பெற்றோருக்கு தங்களின் மகள் காதலால் ஏமாற்றப்பட்டு கருவுற்றதும், கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் சுந்தரை கைது செய்தனர்.