இந்தியா

தலைவலியால் கல்லூரி மாணவர் விபரீத முடிவு.. கதறித்துடிக்கும் குடும்பத்தினர்..!

Summary:

தலைவலியால் கல்லூரி மாணவர் விபரீத முடிவு.. கதறித்துடிக்கும் குடும்பத்தினர்..!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமம், இராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் புனிதவேல். இவர் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபானக்கடையில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இந்த தம்பதிகளுக்கு பூபதி என்ற 19 வயதுடைய மகன் இருக்கிறார். பூபதி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதியில் தனது குடும்பத்துடன் புனிதவேல் திருச்செந்தூர் சென்ற நிலையில், 21 ஆம் தேதி மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு திரும்பியதும் மகேஷ் பூபதி தலைவலிக்கிறது என்று கூறியுள்ளார். 

இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லக்கூறி மல்லிகாவிடம் சொல்லிவிட்டு, பூபதி வேலைக்கு சென்றுள்ளார். மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவந்த தாய், பூபதியை ஓய்வெடுக்கச்சொல்லிவிட்டு பணிக்கு சென்றுள்ளார். வீட்டில் மகேஷ் பூபதி மற்றும் அவரின் தங்கை ராஜேஸ்வரி ஆகியோர் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த மகேஷ் பூபதி மாலை 5 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி தந்தை புனிதவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வந்த புனிதவேல் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகேஷ் பூபதியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகேஷ் பூபதி இறந்ததை உறுதி செய்துள்ளனர். உடல்நலபதிப்பால் மகேஷ் பூபதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், கோரிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.


Advertisement